குறு அரங்கங்கள்
குறு அரங்கங்கள்
கவிப்பேராசான் கண்ணப்பு எழுதும் அரங்க அனுபவங்கள்.
கவிப்பேராசான் கண்ணப்பு எழுதும் அரங்க அனுபவங்கள்.
2-5 நிமிடம்கால அளவில் அடங்கும் மிக தாக்கமான செய்தியை உணர்வோடு சொல்லும் அரங்கங்கள்:
கல்வி செல்வம் வீரம் -2007
சரஸ்வதி பூசையில் அரங்கேறியது, இந்த நாடகத்தில் மூவரை மட்டும் மூன்று பண்புகளைப் பிரதிபலிக்க பாவித்தேன்:
1.செல்வம்: மயிலாய் முத்திரை பிடித்து ஆடி வருதல் மெலிதான சிறு பெண் வருதல்.
2.கல்வி: யானையைபோல் கொஞ்சம் வளர்ந்த சிறுவன் அசைந்து ஒரு கையை மடக்கி மறு கையை நீட்டி யானையாய் குறியீடு இட்டு வருதல் பிளிறல்,
3. வீரம்: சிங்கம் போல் இன்னொரு சிறுவன் உறுமுதல் கையால் சிங்கம் போல் பாவனை செய்து சீறி வருதல்.
குறிப்பு: இந்த அரங்கை மிகக் குறுகிய நேரத்தைல் தயாரித்தேன். பல காலம் பழக்கி அரங்கை நிறைவேற்ற எவ்வளோவோ கஷ்டப்பட்டுள்ளேன் , அரங்கேறுவதற்குள் எத்தனை இடர்பாடுகள், முடிவில் சில அனுபவங்கள் மிகக் கசப்பானவை.
ஆனால் இந்த நாடகத்தில் அரை மணித்தியாலத்திற்குள் பழக்கி, அடைந்த வெற்றி மிகப் பிரமிப்பானது.
பங்குபற்றிய யாவரும் லண்டனில் பிறந்து வளர்ந்த சிறுவர்கள் ஆயினும் அவர்களின் இந்த அரங்கில் காட்டிய ஈடுபாடும் அரங்க முடிவில் அடைந்த மகிழ்ச்சியும் எனக்கு மிகப் பெரிய வெற்றியாகும்.
அரங்கில் பங்காளர்களாகியாகிய நடிகர்கள் பாராட்டப்படும்போது தான் எவ்வளவு பெறுமதியான அரங்கை அதன் இயக்குனர் நிறைவேற்றியுள்ளார் என்பதை உணரமுடிக்கின்றது.





